வீட்டில் மவசிவ கிரகப்பிரவேசம் செட் வைத்து வழிபடுவதன் பலன்கள் :
👉 பழங்காலத்தில் அம்மியிலும் உரலிலும் உணவுப் பொருட்களை அரைத்து சாப்பிட்டதன் காரணமாக மனிதனின் உடல் உறுப்பானது பலமாகவும் உறுதியாகவும் இருந்தது என்பது உண்மை.
👉 ஆனால் நவீன காலத்தில் யாரும் அதை பயன்படுத்தாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டதால் தேவையில்லாமல் உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.
👉 ஆகவே நம் வீட்டில் ஆட்டுக்கல், அம்மிக்கல், உலக்கை, உரல், தானியம் அரைக்கும் கல் இவைகளை சிறிய அளவில் வைத்து அதற்கு செவ்வாய், வெள்ளிதோறும் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வணங்கி வருவது மிகவும் சிறப்பு.
👉 இந்த பஞ்சபூத தத்துவம் அனைத்தும் நமக்கு நன்மை செய்யும் என்பது மூதாதையர் கருத்து.
👉 இதை அடிப்படையாக வைத்து திருமண காலத்தில் அம்மி, உரல், உலக்கை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார்கள்.
👉 நம்பிக்கை இருப்பின் நாமும் அவர்கள் வழியை பின்பற்றி சந்தோஷமாகவும் நீண்ட ஆயுளுடன் இருப்போமாக.
👉 சுமங்கலி பூஜை அன்றும் ஆருத்ரா தரிசன பூஜை அன்றும் மாங்கல்யம் பூஜை விரதம் இருப்பவர்கள் அம்மி மேல் இருக்கும் குழவியை வைத்து பூஜை செய்வார்கள்.
👉 அம்மிக்கல் மேல் எண்ணெய் படக்கூடாது. எதிர்பாராமல் எண்ணெய் பட்டுவிட்டால் அதை சுத்தம் செய்த பிறகு தான் பூஜை செய்ய வேண்டும.
👉 செவ்வாய்க்கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும் இதற்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிட்டும் மவசிவ.